தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா
devaa endhan naavilaadum paadalaaga vaa
தேவா எந்தன் நாவிலாடும் பாடலாக வா தேவா உந்தன் வான்புகழைப் பாட வரம் தா ( 2 ) உன்னருள் மேன்மையால் பூமி எங்கும் புன்னகை உன் புகழ் பாடவே பொங்கி எழும் வல்லமை மனதார வாழ்த்த எழும் இறையரசின் வைகறை
1. நான் எந்தன் வேலியாக என்னலம் கொண்டேன் நீ பூமி எங்கும் வாழும் தென்றலாகினாய் ( 2 ) உன் ஒளி காண காண உள்ளம் மலர வேண்டுமே உன் வழிப் போகப் போக உறவு பெருக வேண்டுமே ( 2 ) இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே - தேவா
2. நான் சிறு கணம் எரியும் ஒளித் துகளானேன் நீ அதை ஏற்றி வைத்த ஒளிக் கடலானாய் ( 2 ) உன் பணி செய்வதிலே எந்தன் ஆசை தீருவே தன் தலை தியாகம் ஏற்கும் தீப வாழ்க்கை இறையே திருவே வாழ்வு உந்தன் கீதமாகவே