தேவ தூதர் வானில்
deva thoodhar vaanil
தேவ தூதர் வானில் தோன்றிடுவான் ஆரவாரத்தோடும் அவர் வந்திடுவார் - எமக்காய்
1. கார்கள் சத்தம் மேகத்தில் முழங்க ஏகமாய் எழுந்து இயேசுவைப் சேருவோம் - விரைவுடன் - தேவ
2. கல்லறை திறந்து மரித்தவர் எழும்ப வல்லமை விளங்க நாமும் கூடுவோம் - மகிமையாய் - தேவ
3. மண்ணில் மீதிலே எண்ணொணாப் பாடுகள் இனி வரும் மகிமைக்கு கிணையாமோ சபையே - எழும்பு வீர் - தேவ
4. மகிமை வஸ்திரம் மணவாட்டி சபை க்கு மணவாளன் தருவார் அன்று நாம் அணிவோம் -மகிழ்வுடன் - தேவ
5. ஆயத்த மாணவர் அன்பரேசுவுடன் அன்றருந்திடுவோம் மாபெரும் விருந்து - இன்பமாய் - தேவ