தேவ தயாபரனே துதிப்பதில்
deva thayaabaranae thudhippadhil
தேவ தயாபரனே துதிப்பதில் ஓய்வதில்லை இனிமேல்.
1. அற்புத கரத்தை கொண்டடியாரை காத்தணைத்தார் அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்கு ஸ்தோத்திரமே.
2. அண்டி நெருங்கிநோரை இன்று வரையும் தாங்கி அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார்
3 கண்ணிகளுக்கு தப்பி கண்மணி போல என்னை எண்ணியே ஆதரித்த ஏகனையே ஸ்தோத்தரிப்பேன்
4 அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தாரே தாங்கி என்னை தம் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் ஸ்தோத்திரமே
5 மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில் மணவாட்டியாக நானும் வானத்திலே சேர்ந்திடுவேன்
6 எப்படி போற்றுவேனோ என்னரும் நேசரையே ஏற்றியே எப்பொழுதும் ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்பேன்