தேவ தாயபரனைத்
deva thaayabaranaith
தேவ தாயபரனைத் - துதிப்பதில் ஓய்வதில்லை இனிமேல்
1. அற்புத கரத்தைக் கொண்டடியாரைக் காத்தணைத்தார். அனுதினம் சாற்றிடுவேன் அன்பருக்குத் தோத்திரமே - தேவ
2. ஆண்டு நெருங்கினேன் இன்று வரையும் தாங்கி அன்றன்று வேண்டியதை அன்புடன் அளித்து வைத்தார் - தேவ
3. கண்ணிகளுக்குத் தப்பி கண்மணி போல என்னை எண்ணியே ஆதரித்த ஏகனையே தோத்திரிப்பேன் - தேவ
4. அன்னை தந்தையின் மேலாய் ஆதரித்தார் தாங்கி என்னை தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் தோத்திரமே - தேவ
5. மன்னவன் இயேசு தாமே மகிமையில் தோன்றுகையில் மணவாட்டி யாகி நானும் வானத்தில் சோந்திடுவேன் - தேவ
6. எப்படிப் போற்றுவேனோ என்னரும் நேசரையே ஏத்தியே எப்பொழுதும் தோத்திரங்கள் ஏறெடுப்பேன் - தேவ