தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்
deva thaasarae ezhundhu potridungal
1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள் வான சேனையுடன் பாடி போற்றிடுங்கள் ஜீவ பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள் மெய்யாய் உங்களுள்ளத்தில் போற்றிடுங்கள்.
2. பாவக் கடன் தீர்த்துவிட்டார் போற்றிடுங்கள் அல்லேலூயா! நம்மை மீட்டார் போற்றிடுங்கள் எல்லாருக்குமாய் மரித்தார் கல்வாரியில் கடன் தீர்த்தார் ஆச்சரியமாய் உயிர்த்தார் போற்றிடுங்கள்.
3. அல்லேலூயா! நாம் வெல்கிறோம் போற்றிடுங்கள் மீட்பராலே முன் செல்கிறோம் போற்றிடுங்கள் போர்செய்வோம் நிலைநின்று நம்பிக்கையாய்ப் பேயை வென்று உற்சாகமாய் முன் சென்று போற்றிடுங்கள்