தேவ குமாரன் பூமேவினார்
deva kumaaran poomevinaar
1. தேவ குமாரன் பூமேவினார்! தீயர்க்காகப் பிணை யாயினார் ! தேவ அன்பின் வடிவாயினார் ! ஆவின் கூடதில் சேயாயினார்!
பாடுவோம் பாடுவோம் பாரினில் வந்த புண்ணியரை தேடுவோம் - தேடுவோம் தேவனின் செல்வ குமாரனை
2. ஆதி வாக்கை நிறைவேற்றினார் நீதி மன்னர் உருமாற்றினார் ஜோதி ரூபமதாய்த் தோன்றினார் ஆதி அந்தமான் அன்பினால்
3. காரிருள் நீக்கினார் ஜோதியால் பேரொளி யாக்கினார் நீதியால் ஆரிய ராயினா ரன்பினால் ஆடுகட் காயரானதினால்
4. வானவர் கானமே பாடினார் ஞானமாய் ஆயர்கள் நாடினார் வான சாஸ்திரிகள் தேடினார் வந்து காணிக்கைகள் சூடினார்
5. உன்னத தேவர்க்கே மகிமை இன்னிலத்தில் சமாதானமே மாந்தர் மேலே பிரியமுமே வந்து சேரவே போற்றுவோமே