தேவ கிருபை எங்கும் வழிந்தோடுதே
deva kirubai engum vazhindhodudhae
1. தேவ க்ருபை எங்கும் வழிந்தோடுதே அவர் கொடி என்றும் ஜோதி வீசுதே மேலுலகம் போல மாட்சியுள்ளது அவர் அன்பு சதா விண் ஜொலிக்குதே.
2. கோடை சூர்ய ஒளி எங்கும் வீசுதே மகிழ்ச்சியின் ஒளி நிறைந்தோடுதே பூலோகத்தார் களிகூர்ந்து பாடிட போற்றுதலின் தொனி முழங்கிடுதே
3. அந்தகாரம் நீங்க ஒளி வீசுமே கர்த்தா உம்மை நாங்கள் நேசித்திடவே வீண் மண்டல மேகம் விரைந்து ஓடும் திரை உயர்ந்திட பிதா தோன்றுவார்.
4. ஒருபோதும் நாங்கள் சந்தேகித்திடோம் மரணத்தின் வாசல் உம்மில் நல்லது நீர் இல்லாத வாழ்வு அந்தகாரமே நித்ய இன்ப வாழ்வின் வழி காட்டுமே.