தேவ எக்காளம்
deva ekkaalam
தேவ எக்காளம் தொனிக்க தேவாதி தேவன் தோன்றுவார்
1. முன் மறைந்த அருமையானவர் முதலில் வருவார் இயேசு வுடன் பின்பு நாமும் அண்ணலோடு இன்பமடைவோம் என்றுமென்றும் - தேவ
2. அன்பர்களே ஆனந்தமாய் இன்முகம் கண்டிடுவார் மின்னல் போல இன்னல் தொலைய இன்பமே இனி என்றுமென்றும் - தேவ
3. பூரணரே பறந்திடுவார் பொன் முடியும் தரித்திடுவார் பாரிடத்தின் பாடு சகித்தோர் பாடி மகிழ்வோம் என்றுமென்றும் - தேவ
4. ஆயிரம் தூதர் சூழ அடியார் அரசாள அல்லேலூயா ஆர்ப்பரி தே ஆளுவோமே என்றுமென்றும் - தேவ
5. ஆருயிரே ஆதரையில் ஆண்டுகள் கடந்திடுதே என்று காண்பேன், எந்தன் உள்ளம் எண்ணி எண்ணி ஏங்கிடுதே - தேவ