தேவ தேவனைத் துதித்திடுவோம்
deva devanaith thudhithiduvom
தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்திப் போற்றிடுவோம்
அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா பரிசுத்தர்க்கே அல்லேலூயா இராஜனுக்கே
எங்கள் காலடி வழுவிடாமல் எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் கண்மணிபோல காத்தருளும் கிருபையால் நிதம் வழி நடத்தும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை கிருபை தொடர்ந்திடவே வேத வசனம் கீழ்ப்படிவோம் தேவ சாயலாய் மாறிடுவோம்
வானத்தில் அடையாளம் தோன்றிடுமே இயேசு மேகத்தில் வந்திடுவார் நாமும் அவருடன் சேர்ந்திடவே நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம்
சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் சாகும் வரையில் உழைத்திடுவோம்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D A D
A G D
G Bm A
D Em A D
D G
Em A F# Bm
Em D
A D
D G D A D
A G D
G Bm A
D Em A D
D G D A D
A G D
G Bm A
D Em A D