தேவ தேவனாம் இயேசு
deva devanaam yesu
தேவ தேவனாம் இயேசு ராஜன் - என்னை மீட்டிட பாரில் வந்து - சாப சிலுவையில் தொங்கினீரே - 2 மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த எந்தன் - இயேசு உயிரோடு இன்றும் வாழ்கிறீர் - 2
மகிமைக்கு பாத்திரர் நீர் மகிமையாய் இருப்பவர் - 2 மகிமையின் தேவன் நீர் பாவியாம் என்னையும் நேசித்தீர் - 2 உமது புகழ் பாடியே நான் உம்மை போல் வாழுவேன் உந்தனின் வல்லமை தாரும் என்னுயிர் தேவனே - 2
சீக்கிரம் வருவேன் என்று சொன்னவர் நீரல்லோ - 2 மணநாளை நாடி நான் மணவாட்டியாய் நிற்கிறேன் - 2 மேகம் மீதில் பறந்து இயேசுவோடு செல்வேன் நித்யமாம் பரலோகில் வாசம் செய்குவேன் - 2