தேவ தேவன் புதிய
deva devan pudhiya
தேவ தேவன் புதிய கிருபை ஜெகமதில் ஈந்தனரே அல்லேலூயா! ஜெயம்
1. கின்னர கீதம் முழங்க அண்ணலாம் இயேசுவை துதிப்போம் ஆனந்தம் இன்றே, ஆர்ப்பரித்து நின்றே - தேவ
2. சென்ற வாழ்நாளெல்லாம் காத்தே ஜெயத் தொனியோடெம்மைச் சேர்த்தே தேடிய நல் தேவை, நாடிடுவோம் நாமே - தேவ
3. நோய் பிணி யாவும் அகற்றி தாயினும் மேலும் அனைத்து ஆதரித்த அன்பை, காதலிப்போம் நாமே - தேவ
4. பாவத்தின் சோதனையாலே லோகத்தோடேயழியாதே காத்த பெருங்கிருபை சேர்த்ததே நற்பரனை - தேவ
5. கல்வாரி பாதையில் தொடர்ந்தே நான் வல்லமையோடு நடந்தே அல்ல லின்றியே, நல்கினார் கிருபை - தேவ
6. தோத்திரம், தோத்திரம் துதியாம் பாத்திரமா மலர் அணிய மாட்சி மிகக் கொண்டேன், பாட்டினாலே வென்றேன - தேவ