தேவ அன்பு பெரியது
deva anbu periyadhu
தேவ அன்பு பெரியது அது தாய் அன்பிலும் உயர்ந்ததே உள்ளங்கையில் உன்னை வரைந்த அன்பு கள்ளமில்லாமல் தாங்கும் அன்பு
கன்னத்தில் அறைந்த நேரமதிலும் புன்னகை தந்த அன்பல்லோ காட்டிக்கொடுத்த வேளைகளிலும் மீட்பு தந்த மெய் அன்பு
தூரமாய் நீ ஓடினாலும் தேடி அலைந்த அன்பல்லோ மனம் நம்பி நீ கலங்கும்போது உனக்காய் கதறும் மெய்யன்பு
பாவத்தில் நீ மாண்டிடாமல் ஜீவன் தந்த அன்பல்லோ தகப்பன் தாயும் தள்ளினாலும் தாங்கி அணைக்கும் தேவ அன்பு