தேவ ஆவியே தூய ஆவியே
deva aaviyae thooya aaviyae
தேவ ஆவியே தூய ஆவியே - திவ்ய பிரசன்னத்தால் தாகம் தீருமே
ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே
சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவை
புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே
ஆண்டவர் ஆலயமாம் எங்கள் இதயமே ஆவியின் வாசஸ்தலம்தூய்மைப்படுத்துமே