தேவ ஆவியே என்னை தேற்றும்
deva aaviyae ennai thetrum
தேவ ஆவியே என்னை தேற்றும் ஆவியே தூய ஆவியே தூய்மையாக்கும் ஆவியே
1. பரிசுத்த ஆவியே பாவம் போக்கும் பரலோக ஆவியே பெலப்படுத்திடுமே
2. கிருபையின் ஆவியே கிருபை தாருமே வல்லமை ஆவியே வரங்கள் தந்திடுமே
3. சத்ய ஆவியே உண்மை தாரும் நித்திய ஆவியே ஜீவன் தந்திடுமே
4. புதிய ஆவியே புது சிருஷ்டிக்கும் விசேஷித்த ஆவி வெளிப்படுத்திடுமே
5. அன்பின் ஆவியே அன்பைத் தாரும் நல்ல ஆவியே நன்மை தந்திடுமே
6. உன்னத ஆவியே உயிர்ப்பியும் மகிமையின் ஆவியே மருருபமாக்குமே