தேவ ஆவியானவர்
deva aaviyaanavar
தேவ ஆவியானவர் நம் நடுவில் இருக்கிறார் தேவ ஜனத்தின் நடுவே உலாவி வருகிறார்
ஆவியானவர் ஆவியானவர் - 4
1. ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடினார் இன்றும் தம் ஜனத்தின் மேல் அசைவாடுகிறார் - 2 ஆழங்களுக்கு மேலாக ஆளுகிறவர் - 2 இருதயத்தின் ஆழங்களை அறிகின்றவர் - 2 ஆவியானவர்
2 பெலவீன நேரத்திலே பெலன் தருகிறார் சோர்ந்து போகும் வேளையிலே தேற்றுகிறார் - (2) ஆவியில் அனல் மூட்டி எழுப்புகிறாரே - 2 என் தலையை எண்ணெயால் அபிஷேக்கின்றார் (2) ஆவியா
3. புதிய புதிய பாஷைகளை நாவில் தருகிறார் வல்லமையான வரங்களினால் முடிசூட்டுகிறார் - (2) ஆத்ம பாரம் உள்ளத்திலே பொங்கி நிறைந்திட - (2) பரலோக தரிசனம் கண்டு மகிழுவேன் - (2)