தேவ ஆவியால் தேவா
deva aaviyaal devaa
தேவ ஆவியால் தேவா எந்தன் ஜீவனாகும் நின் கிருபை பாவ நாசனே இயேசு ராஜனே பகர்ந்தீர் பரிவுடனே
காரிருள் சூழும் லோக மாயையில் ஆருமற்றோனாய் அலைந்தேன் விலைமதியா உம் தூய உதிரத்தால் விலையேறப் பெற்றவன் நான் - தேவ
மாசில்லாத உம் ம கிருபையால் மானிடர் பெற மகிமை ஆன குறைகளும் போக்கிடவே யாவும் ஆனீர் கொல்கொதா பலியாய் - தேவ
இன்பாகுமே இக் கிருபையே இன்னலில் என்னை நடத்தும் முன்னும் பின்னுமாக தாங்கி நடத்துவார் இன்னும் வல்லமை யளித்தே - தேவ
நல்ல மெல்கிசேதேக்கின் அம்முறை நல்கியே அந்தம் வரையும் விசுவாசந்தனில் வளர்ந்தோங்க வென்னில் வாசஞ் செய்யும் கிருபையே - தேவ
அழைத்தீர் சீயோன் அதில் சேர்த்திட பழுதற்ற கிருபையால் வழுவாது என்னைத் விழி போல காப்பீர் அழிவற்றோனாய் உமக்கே - தேவ