தேவ ஆட்டுக் குட்டியே லோகத்தாரின் மீட்பரே
deva aattuk kuttiyae logathaarin meetparae
1. தேவ ஆட்டுக் குட்டியே லோகத்தாரின் மீட்பரே உம்மால் மீட்கப்பட்ட நான் தேவரீர்க்குச் சொந்தம்தான் நீர் என் கோட்டை தஞ்சமாம் யார் என் வாழ்வை நீக்கலாம்?
2. உம்மைப் பற்றும் நேசத்தை உம்மில் வைக்கும் பக்தியை பேயும் கெட்ட லோகமும் மூர்க்கமாய் விரோதிக்கும் இன்பம் துன்பம் நித்தமே கண்ணியாக நிற்குமே.
3. கர்த்தரே என் உள்ளத்தில் ஒளி வீசி மனதில் அந்தகாரம் நீக்கிடும் அன்பின் ஜுவாலை ஏற்றிடும் தூய ஆவி ரூடவ்வையும் பூர்த்தியாக அளியும்.
4. எந்த நாழிகையிலே நீர் வந்தாலும் யேசுவே உம்மை நானும் சந்தித்து கண்ணால் கண்டு களித்து வாழ்வதற்குத் தினமும் சாவதானம் ரூடவ்ந்திடும்.