அழும் எந்தன் நெஞ்சுக்கு
azhum endhan nenjukku
அழும் எந்தன் நெஞ்சுக்கு ஆறுதல் உம் வசனம் தவித்திடும் வேளையில் என் தஞ்சம் உம் பிரசன்னம்.
சொந்தமும் பந்தமும் கைவிடலாம் நீர் என்னை தாங்குகிறீர் என் கையை என் கண்ணை குத்திடலாம் நீர் என்னை அணைத்து கொள்வீர் தாங்கும் தாங்கும் ஐயா என்னை அணைத்து கொள்ளும் ஐயா
பெற்றவள் பிள்ளையை மறந்திடலாம் நீர் என்னை மறப்பதில்லை சுற்றமும் நண்பரும் மாறிடலாம் உம் அன்பினில் மாற்றம் இல்லை உம் உள்ளம் கைகளிலே என்னை வரைந்து கொண்டீர் ஐயா