அழுகை ஆனந்தம் ஆனதே
azhugai aanandham aanadhae
அழுகை ஆனந்தம் ஆனதே புலம்பல் புதுப்பாடலானதே - என் கண்ணீர் களிப்பாக ஆனதே கர்த்தர் என்னோடு இருப்பதால் இயேசு என்னோடு இருப்பதால் - 2
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா - 4
1. துக்கம் சந்தோஷமானதே துயரம் என்னை விட்டு நீங்கினதே சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட இயேசு என்னோடுண்டு
என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே என் தலையை உயர்த்தினாரே என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே என்னை ஆசீர்வதித்தாரே
பல்லவி
அல்லேலூயா அல்லேலூயா - 4
2. கசப்பு மதுரமானதே கவலை என் வாழ்வில் ஒழிந்ததே சாம்பல் சிங்காரமாக மாறிட இயேசு என்னோடுண்டு
3. தடைகள் உடைந்து போனதே வழிகள் மீண்டும் உண்டானதே புதிய காரியங்கள் என் வாழ்வில் தோன்றின இயேசு என்னோடுண்டு