அழைத்தவரே முன் குறித்தவரே
azhaithavarae mun kurithavarae
அழைத்தவரே முன் குறித்தவரே பெயர் அறிந்தவரே கரம் பிடித்தவரே – (2)
உண்மையாய் உண்மையாய் ஓடிட உதவுமே பந்தய பொருளையும் அடைந்திட தயை புரியுமே
1. கானானின் கரையில் கால் தொடும் வரையில் கருணையின் நாதா நின் கரம் பிடித்தே பொறுமை தியாகம் நல் மனதோடே உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்….
2. எக்காள சத்தம் செவிதொடும் வரையில் எஜமானனே உம் பாதம் தொடர்ந்தே விசுவாசம் அன்பு நற்சாட்சியோடே உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்…
3. ஜீவ கிரீடம் சிரம் தொடும் வரையில் மணவாளனே உம் சிந்தை நிறைந்தே சாந்தம் தயவு நற்குணத்தோடே உண்மையாய் ஓடிட உதவிடுமே – உண்மையாய்