அழைத்தவர் உண்மையுள்ளவர்
azhaithavar unmaiyullavar
அழைத்தவர் உண்மையுள்ளவர் என்னை அழைத்தவர் உயர்ந்தவர் என்றும் நடத்திட வல்லவர் இனியும் காத்து நடத்திடுவார்-2
நடத்துவார் என்னை தாங்குவார் உண்மையாய் என்றும் உயர்த்துவார்-2
உலகத்தின் பின்னே ஓடிய என்னை அவருக்குப் பின்னே ஓட வைத்தார் -2 உலகம் வெறுத்த என்னை உலகமே போற்ற வைத்தார் - 2
வேதத்தில் ஒன்றும் அறியா என்னை வார்த்தையால் ஊழியம் செய்ய வைத்தார் பிரயோஜனமற்ற என்னையும் (அவர்) ராஜ்ஜியம் கட்ட வைத்தார்