அழைத்தவர் உண்மையுள்ளவர்
azhaithavar unmaiyullavar
அழைத்தவர் உண்மையுள்ளவர் அதிசயமாய் நடத்திச் செல்லுலார் காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம் இயேசு என்றும் மாறிடாதவர்
நடத்துவார் நடத்துவார் (2) கடைசிமட்டும் காத்து நடத்துவார்
1. மலைகள் கூட விலகிப் போகலாம் பர்வதங்கள் பெயர்ந்து போகலாம் கர்த்தர் கிருபை என்றென்றும் விலகிடாமல் காத்திடும் உடன்படிக்கை என்றும் மாறாதே
நடத்துவார் நடத்துவார்(2) கடைசிமட்டும் காத்து நடத்துவார் -
2. மரண இருளின் பள்ளத்தாக்கிலும் தேவரீர் என்னோடிருக்கின்றீர் உமது கோலும் உமது கரமும் சத்துருக்களை விலகச் செய்யும் பாத்திரம் நிரம்பி வழியுமே
3.மேகமீதில் வேகம் வருவாரே கோடாக்கோடி தூதர் சூழ்ந்திட அழைத்துச் செல்வார் என்னையும் ஆவலோடு செல்லுவேன் எந்தன் துக்கம் நீங்கிச் போகுமே செல்லுவேன் செல்லுவேன் (2) நேசரோடு நானும் செல்லுவேன்