அழைத்த தேவன் கடைசி வரையிலும்
azhaitha devan kadaisi varaiyilum
அழைத்த தேவன் கடைசி வரையிலும் கண்ணின் மணிபோல் காத்திடுவார்-2 அவர் மாறாதவர் விட்டு விலகாதவர் உள்ளங்கையில் மறுத்துவிடுவார்-2
என் மகனே, என் பெலனே, என் திடனே என்று அழைத்திவிடுவார்-2 அழைத்தவர் மாறாதவர்-ஒவ்வொரு நாளும் நடத்திடுவார்-அவர்
என் சிநேகிதனே, என் தாசனே என் யெசூரனே என்று அழைத்திடுவார்-2 சொன்ன வாக்கை நிறைவேற்றுவார் சொல் தவறாமல் நடத்திடுவார்-அவர்
என் பிரியமே என் மணவாட்டியே என் பெயரை அவர் அழைத்திடுவார் -2 உனக்கு முன்னே சென்றிடுவார் கோணல்கள் எல்லாம் நேராக்குவார்-அவர்