அழைப்பு ஒன்று உன்னக்கு
azhaippu ondru unnakku
அழைப்பு ஒன்று உனக்கு உண்டு எழுந்து வா மகனே-இறைவன் சுமக்கும் சிலுவை நமக்கும் உண்டு தூக்கி வா மகனே
உபத்திரவங்கள் நிறைந்த உலகம் உன்னைத் துன்பப்படுத்தும்-அதை ஜெயித்த இறைவன் அழைப்பை ஏற்று விரைந்து வா மகனே
உயிரைத் தந்து உலகில் உன்னை உலவவிட்ட இறைவன்-இன்று உன் அழுக்கை நீக்கி ஆத்துமாவை தேற்றவே அழைக்கிறார்
பதுக்கிப் பொருளை சேர்க்கும் உலகில் பாவம் குறைந்திடுமா-சிலுவை சுமக்கும் இயேசு கிருபையின்றி மீட்பும் அடைந்திடுமா