அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
azhaikkiraar yesu azhaikkiraar
அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய்தம்மிடம் அழைக்கிறார் தேவகுமாரன் தேடி அலைந்தே ஜீவன்தர உன்னை அழைக்கிறார்
கல்மனமே கல்வாரி கண்டு கரையாதோ உன் உள்ளமே நேசர் உன்னை மீட்டிட பாசமாய் இன்று அழைக்கிறார்
பாவ பலியாய் மாண்டவர் நோயை பேயை வென்றவர் துன்பம் துயரம் சகித்தவர் தஞ்சம் தந்துன்னை அழைக்கிறார்
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே வாருங்கள் என்னண்டை என்கிறார் வறுமை வாழ்வை மாற்றிட வருந்தி உன்னை அழைக்கிறார்