அழைக்கிறார் அழைக்கிறார்
azhaikkiraar azhaikkiraar
அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை கல்லும் கரையும் கல்வாரியண்டை கர்த்தர் அழைக்கிறார்
கேட்டின் மகன் கெட்டழிந்தான் கெட்ட குமாரனைப்போல் பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தில் மாளாதே - அழைக்கிறார்
உந்தன் நீதி கந்தையாகும் உன்னில் நன்மை ஒன்றில்லை பாவஞ் செய்தே மகிமையிழந்தாய் பாவியை நேசித்தார் - அழைக்கிறார்
பாவங்களை மறைப்பவன் பாரில் வாழ்வை அடையான் சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும் சங்காரம் அடைவார் - அழைக்கிறார்
நானே வழி சத்தியமும் நித்திய ஜீவன் என்றார் இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால் இரட்சணியம் அடைவாய் - அழைக்கிறார்
காலங்களும் கடந்திடும் வால வயதும் மாறும் தேவனைச் சந்திக்கும் வேளையிதே தேடி நீ வாராயோ - அழைக்கிறார்