அழகே என் இயேசுவே
azhagae en yesuvae
அழகே என் இயேசுவே உம்மை போற்றுவேன் , உம்மை உயர்த்துவேன் என்றுமே அழகே என் இயேசுவே உம்மை போற்றுவேன் , உயர்த்துவேன்
அலங்கோலமாய் இருந்த என்னையும் நீர் அலங்காரமாய் இன்று உயர்த்தினீரே
உம்மை ஆராதிப்பேன் என் அழகே , என் இயேசுவே -2
என் தாயும் தன் கருவை அறியுமுன்னே உம் உள்ளங்கையில் வரைந்து முன் கண்டீரே
கலங்கின நேரங்களில் என்னை கன்டீரே என் தனிமையின் பாதைகளில் துணையநீரே
குயவனே களிமண்ணாக கிடந்த எனனயெடுத்து நீர் விரும்பும் பாத்திரமாய் வனைந்து கொண்டீர்