அழகான இயேசுவை ஆராதிப்பேன்
azhagaana yesuvai aaraadhippen
அழகான இயேசுவை ஆராதிப்பேன் உம்மையே உயிர்வாழும் நேசரே என் உயிராக வாருமே உமக்காகவே இனி மகிழ்வுடன் வாழுவேன் உம் பெயரை எங்கும் சொல்லி சொல்லி பாடுவேன்
உலகம் தருமா உம் அன்பைப் போலவே எதுவும் தருமா உம் அன்பு தரும் இன்ப சந்தோஷம் உம் சிலுவையின் மகிமை என் மனதுக்கு இனிமை உம் சிலுவையின் பெருமை என் மனதுக்கு வலிமை
உம் நாமம் பாடப் பாட மனம் கோயிலாக உணர்ந்தேன் சந்தோஷமாய் உம் வேதம் தேட தேட நித்தம் வாழ்வின் பாதை அறிந்தேன் கொண்டாட்டமாய் உம் பார்வை நாடி நாடி அலைந்தேன் என் நேசர் நீர் தானே உம் பாதை போக போக உணர்ந்தேன் என் பாதை நீர் தானே-அழகான
உம்மோடு பேச பேச அருள் ஜீவ ஊற்றை அறிந்தேன் அற்புதமாய் உம் வார்த்தை கேட்க கேட்க இருள் ஓடி போக உணர்ந்தேன் நித்தியமாய் உம் பாதம் தேடி தேடி அமர்வேன் என் ஜீவன் நீர் தானே உம் நேசம் வாஞ்சையோடு துதிப்பேன் தெய்வீகம் நீர் தானே – அழகான