அவர் தோள்களின் மேலே ( அவர் வார்த்தையின் மேலே)
avar tholgalin melae ( avar vaarthaiyin melae)
அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் (அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்) கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்துக் கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே -2
யேகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யேகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே -2
1. மரண இருளின் பள்ளதாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் -2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் -2
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டு கொண்டாரே -2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே -2