அவர் தழும்புகளால் நான் சுகமானேன்
avar thazhumbugalaal naan sugamaanen
அவர் தழும்புகளால் நான் சுகமானேன் அவர் இரத்தத்தால் பரிசுத்தமானேன்-2 என்னை மீட்ட இயேசுவே ஒருபோதும் கைவிடாரே - அவர் இன்றுமென்றுமாய் நம்மை நடத்திடுவாரே
மரத்தில் தூக்கப்பட்டவன் சபிக்கப்பட்டவன் என்றபடி கிறிஸ்து நமக்காக சிலுவையிலே சாபமானார் சாப ரோகத்துக்கு விலக்கியே மீட்டுக்கொண்டார் சுகமும் சந்தோஷமும் ஈவாக நமக்கு தந்தர
துரைத்தனம் அதிகாரங்களை உரிந்து வெளிக்கோலமாக்கி வெற்றி சிறந்தார் அவைகளின் மேல் சிலுவையிலே நமக்கெதிரான கையெழுத்தெல்லாம் குலைத்துப் போட்டார் நடுவிலிராதபடி சிலுவையிலே அறைந்துவிட்டார்
தமக்கு பயந்தோர்கள் மேல் நீதியின் சூரியன் உதித்திடுமே அதின் செட்டையின் கீழே ஆரோக்கியம் இருக்குமே வெளியே புறப்பட்டு போய் கொழுத்த கன்றுகளைப் போல வளர்வீர் என்று சொல்லி வாக்கு நமக்கு அளித்தாரே