அவர் தழும்புகளால் குணமாகினேனே
avar thazhumbugalaal kunamaaginenae
1. அவர் தழும்புகளால் குணமாகினேனே அவரே சுமந்தார் எந்தன் நோவை அவர் பாடுகளால் அதில் பெலன் அளித்தார் அரியதோர் வைத்தியரே குணமானேன் நான் குணமானேன் இயேசுவின் தழும்புகளால்
2. பன்னிரு ஆண்டுகள் கொடும் நோயதினால் இந்நிலம் வருந்தி வந்த மாதை மகளே திடன்கொள் சுகமானாய் எனவே மொழிந்த மா நேசரிவர்
3. சித்தமுண்டெனக்கு சுத்தமாவாய் என சத்தியர் தொட்டுமே குஷ்டம் போக்கி சந்தோஷம் பகர்ந்த இயேசு என்னும்மருந்தே சந்ததம் எனக்கும் அவர்
4. பதினெண்ணாண்டுகள் கூனியாயிருந்த அணங்கை நிமிரச் செய்த அவர் சாத்தானின் தலையை நசுக்கின வல்லவர் சக்தியுமே எனக்களித்தார்
5. திருவாக்கை நம்பி வருவீர் ஜனமே மருவில் யாருண்டு இயேசுவல்லால் தருவீர் இதயம் பூரணமாய் அவர்க்கே இவருந்தன் இரட்சகரே