அத்தி மரம் துளிர்விட்டது
athi maram thulirvittadhu
அத்தி மரம் துளிர்விட்டது வசந்த காலமே ஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமே
கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலமிது கடைசிகாலம் கர்த்தரின் வருகை நிற்காது
நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்குமென்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்டிடுதே
வீட்டுக்கு வீடு இனம் எழும்பி பகையினில் முடியுமென்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினால் முடிந்திடுதே