அறுவடைக்களம் நோக்கிப் புறப்பட்டோம்
aruvadaikkalam nokkip purappattom
அறுவடைக்களம் நோக்கிப் புறப்பட்டோம் அருட்பணியாளராய் செயலாற்ற அகிலமெங்கிலும் ஆண்டவர் நாமம் அறிவிக்க சேனையாய் எழும்பிடுவோம்
முன்வைத்த காலை பின்வைக்கமாட்டோம் யோசுவாவின் சேனைகள் நாங்களே
இந்த பெலன் போதுமென்ற அருள்நாதா இதை நம்பி முன்செல்வோம் இயேசு ராஜா எழுப்புதல் அக்கினியை இறக்கிடவே எழும்பினோம் தேவ சங்க இளைஞராய்
இதயத்துடிப்பு எல்லாம் நீர் தானே இக்கால எலியாவும் நாம் தானே இயற்கைக்கு மேற்பட்ட அற்புதங்கள் இயேசுவின் நாமத்தில் செய்திடுவோம்
சாத்தானின் சதிகளை முறித்துமே ஜனங்களை அவரண்டை சேர்ப்போமே ஜாதிகள் தேவனை தொழுதிடவே ஜீவ சாட்சியாய் வாழ்ந்திடுவோம்