அறுவடைக்காலம் அவசரமே
aruvadaikkaalam avasaramae
அறுவடைக்காலம் அவசரமே அறுவடை செய்ய விரைந்திடுவீர் - 2 விளைந்த வயல் வெளிகள் வருந்தி அழைக்கின்றதே - 2
1. நெருக்கி ஏவிடுதே கல்வாரி தூய அன்பே - 2 நொறுக்கப்பட்டார், பிழிப்பட்டார் எடுத்துரைப்பாயா தேவ அன்பை - 2
2. காலங்களோ கடைசி நாட்களோ இல்லையே - 2 அழிவினின்று தப்பும் வழி அறிவிப்பார்கள் யாரும் உண்டோ - 2
3. பாதாள ஜுவாலையிலே புழுவாய் துடிக்கின்றாரே - 2 உடன் பிறந்தோர் ஐவருமே தடுத்திடுவோர் இங்கே யாரும் உண்டோ - 2
4. மேய்ப்பனில்லா ஆடுகள் திகைத்து திரிகின்றதே - 2 வழி சத்தியம் ஜீவனான கிறிஸ்துவை சொல்ல யாரும் உண்டோ - 2