அறுப்போ மிகுதி
aruppo migudhi
அறுப்போ மிகுதி ஆட்கள் குறையுதே அறுப்புக்கு எஜமானவர் - தமதாட்கள் அனுப்பிய ஜெபிப்போம்
1. நித்திய நாமத்தின் பாதையில் செல்லுவோருக்கு சத்தியம் கூறிடவே யாருமில்லையே கர்த்தரின் கருணை இத்தரையறியா எத்தனையோ ஆத்துமாக்கள் அழிகின்றாரே - ஆறு
2. அந்தோ பாவங்களாலும் சாபரோகங்களாலும் நொந்தே அனுதினமும் நலிவோருண்டே எந்தையும் ஏசுவின் மா அன்பும் வல்லமையும் எங்கும் எவர்க்கும் கூறிட எவர் வருவீர் - ஆறு
3. பின்மாரியின்றி பூவின் நெற்பயிர் மடியுதே முன்மாரியின்றி மனம் வாடுதே ஆவியின் கனிவுடன் போராடி ஜெபிப்போம் செவியில் பெருமழையின் ஓசை கேட்குதே - ஆறு
4. ஏதும் செய்ய பொண்ணா ராக்காலம் அடுக்குதே ஏகமாய் பகல் அது கிரியை செய்வோம் அப்போஸ்தலரின் உபதேசத்தின் ஒளியில் இப்புவியோர் வந்திடவே விரைந்தழைப்போம் - ஆறு
5. கண்ணீரில் விதைப்பவர் கெம்பீரத்தோடறுக்க மண்ணிலோர் பின்மாரியும் வந்திடுதே ஞாலத்தில் இன்னுமவர் வேலை தாமதமேன் காலம் இனியில்லை உணர்ந்தெழுந்திடுவோம் - ஆறு