அருணோதயம் துதிக்கிறேன்
arunodhayam thudhikkiren
அருணோதயம் துதிக்கிறேன் அருள்பரனே வாருமே ஆவிவரந்தாருமே என் இயேசுவே
1. கருணையுடன் கடந்த ராவில் காப்பாற்றினீர் தெய்வமே கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் என் ஏசுவே சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்
2. இந்த நாளைக் காணச்செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே இதற்காய் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என் இயேசுவே இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்
3.கதிரவன் எழும்பிவரும் முறையின்படியே என்மேல் கர்த்தரே நீர் பிரகாசித்திடும் - என் இயேசுவே நித்தம் நித்தம் பிரகாசித்திடும்
4. லோகமதில் நான் புகுந்து வேலைசெய்யப் போகிறேன் உம் தூதனாலே காவல் செய்யுமே - என் இயேசுவே உம் சமுகம் என்னைச் சூழச் செய்யுமே
5. பகலில் வரும் மோசமொன்றும் தமியன்மேல் விழாமலே பாதுகாக்க வேணும் தெய்வமே - என் இயேசுவே சூது வாது போக்கும் தெய்வமே
6. தந்திரச்சாத்தா னெழும்பிவந்து போர் புரிந்தாக்கால் தாங்கி எனை மீட்க வேணுமே - என் இயேசுவே ஓங்கி வென்று காக்கவேணுமே
7. செய்யும் வேலை யாவுக்கும் உம் மா கிருபை வேணுமே இல்லாவிடில் நான் வெறுமையே - என் இயேசுவே எல்லாம் உம்மால் கூடும் உண்மையே
8. அன்பு பலம் தெளிந்த புத்தி ஆவிவரம் தாருமே அடியேன் என்னைக் காத்துக் கொள்ளுமே - என் தேவனே அருமை மீட்பர் உம்மைத் துதிக்கிறேன்