அருணோதயம் போல இயேசு
arunodhayam pola yesu
அருணோதயம் போல இயேசு (நேசர்) உதித்து வருகிறார் கந்தவர்க்க பாத்திகளைப் போல் வாசம் (பாசம்) தருகிறார் -2
என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவே என் உயிரும் இயேசுவே என் அமுதம் இயேசுவே -2
நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர் - நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்து கொண்டவர்
தூதாயீம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே - அருமையான கனிகளும் உண்டு உமக்கு தருகிறேன்
பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே - தூபவர்க்கமாக தினமும் என்னைத் தருகிறேன்