அருணோதயம் ஜெபிக்கிறேன்
arunodhayam jebikkiren
அருணோதயம் ஜெபிக்கிறேன் அருள் பரனே கேளுமே ஆவி வரந்தாருமே என் தேவனே.
1. கருணையுடன் கடந்த ராவில் காப்பாற்றினீர் தெய்வமே கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் - என் தேவனே சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்.
2. இந்த நாளைக் காணச் செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே இதற்காயும்மை ஸ்தோத்திரிக்கிறேன் - என் தேவனே இதயத்தாலும் ஸ்தோத்திரிக்கிறேன்.
3. மாமிசமும் கண்ணும் இந்த மாய்கையில் விழாமலே ஆவிக்குள் அடங்கச் செய்யுமே - என் தேவனே பாவிக்கருள் பெய்யச் செய்யுமே.
4. செய்யும் வேலை யாவுக்கும் உம் மா கிருபை வேணுமே இல்லாவிடில் நான் வெறுமையே - என் தேவனே எல்லாம் உம்மால் கூடும் உண்மையே.
5. வருகைக் கேற்ற ஆயத்தமும் மறுப்பிறப்பின் ஆவியும் மன திரங்கித் தாருமேசையா - என் தேவனே தினமும் என்னைக் காரும் யேசையா.
6. அன்பு பலம் தெளிந்த புத்தி ஆவி வரம் தாருமே அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமே - என் தேவனே அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன்.
7. கதிரவன் எழும்பிவரும் முறையின்படி என்மேலே கர்த்தரே நீர் பிரகாசித்திடும் - என் இயேசுவே நித்தம் நித்தம் பிரகாசித்திடும்