அருமை தயாளனே
arumai thayaalanae
அருமை தயாளனே அன்பு என் ஏசுவே அள்ள அள்ள குறையாம அன்பு வெச்சவரே என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே அய்யா உம் அன்பு எனக்கு போதுமே இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே-2
உம்மோட அன்பை நானும் புரியாம போனேனே எங்க போயும் அந்த அன்பு கிடைக்கல அந்த அன்பை நானும் தெரியாம போனேனே எங்க தேடியும் அந்த அன்பு தெரியல அந்த அன்பு கிடைக்கல அது எனக்கு தெரியல -2 அந்த அன்பை மட்டும் எனக்கு இங்க கொஞ்சம் தாங்கப்பா அந்த அன்பு இல்லன்னா நானும் ஒன்னும் இல்லப்பா-2
வாழ்வை ஆதாரமாய் வழிவகுத்த தெய்வமே வழிகாட்ட எனக்கு இங்கு யாரும் இல்லப்பா வளமாய் நானும் இங்கே வாழச்சொல்லி தந்தவரே வாழ்வு கொடுக்க இங்கே யாரும் இல்லப்பா ஒரு வாழ்வு கிடைக்கல ஒரு வழியும் தெரியல-2 இங்கு வாழ மட்டும் எனக்கு நீங்க சொல்லி தாங்கப்பா வாழ்க்கை எல்லாம் இனிமே அது உமக்கு தாங்கப்பா-2
ஐயா உம் அன்பு எனக்கு போதுமே இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே-2 அருமை தயாளனே அன்பு இயேசுவே அள்ள அள்ள குறையாமல் அன்பு வெச்சவரே என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே-2