அருள் நாதர் நாமமதில்
arul naadhar naamamadhil
அருள் நாதர் நாமமதில் ஒருமனமாய் உருகி தொழுகின்ற நேரமெல்லாம் வந்தீடுவார் அருகில்
இதயம் நொறுங்கினோரின் ஆதரவும் அவரே-2 கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல் அணைத்திடுவார்-2
நோயினால் நொந்தவரை தாயின்பால் அணைப்பவரை-2 பரிகாரி நானேயென்பார் பட்சமாய் தாங்கிடுவார்-2
மாயையில் மயங்கினோரை தயைதந்து மாற்றுவாரே-2 தூயாவி ஈந்திடுவார் தூய்மையாய் மாற்றிடுடுவார்-2