அற்புதரே (3) இயேசு அற்புதரே
arpudharae (3) yesu arpudharae
அற்புதரே (3) இயேசு அற்புதரே இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் இன்று அற்புத விடுதலை பெற்றிடுவோம் வல்லமையின் நாமம் அது விடுதலையின் நாமம் அது இயேசுவின் நாமத்தை உயர்த்த உயர்த்த அற்புதங்கள் நடக்கின்றதே
சர்ப்பங்கள் மிதித்திட சத்துருவை மேற்கொள்ள-இருளை வெளிச்சமாக்க வல்லமை இறங்குதே வான மண்டல பொல்லாத சேனைகளும் அக்கினியால் எரிந்து சாம்பலாகுதே
அதிகார துரைத்தனங்கள் அந்தகார சங்கிலிகள் ஏவலின் ஆவிகளும் சிதறி ஓடி போகுதே பாவ சாப கட்டுகளும் பறந்தோடுதே பரம தேவன் இயேசுவின் இரத்தத்தினால்
குழப்பத்தின் ஆவிகளும்-பிரிவினையின் ஆவிகளும் குடும்ப வாழ்விலிருந்து இப்பொழுதே ஓடிடுதே வியாதி வறுமை வேதனைகள் நீங்கிடுதே வல்லவராம் இயேசுவின் நாமத்தினால்