அற்புதங்கள் செய்வார் இயேசு
arpudhangal seyvaar yesu
அற்புதங்கள் செய்வார் இயேசு அற்புதங்கள் செய்வார் -2 அவரை நோக்கி ஜெபிக்கும் போது அற்புதங்கள் செய்வார் -2
பாவம் நிறைந்த உந்தன் வாழ்க்கையில் அற்புதங்கள் செய்வார் சோதனை நீக்கி ஜெயமே தந்து அற்புதங்கள் செய்வார் -2
வியாதி நிறைந்த உன் சரீரத்தில் அற்புதங்கள் செய்வார் வேதனை நீங்கி சுகமே தந்து அற்புதங்கள் செய்வார்
கலக்கம் நிறைந்த உன் குடும்பத்தில் அற்புதங்கள் செய்வார் கவலை போக்கி கண்ணீர் துடைத்து அற்புதங்கள் செய்வார்