அற்புதங்கள் செய்பவர் இன்னும் வாழ்கிறார்
arpudhangal seybavar innum vaazhgiraar
அற்புதங்கள் செய்பவர் இன்னும் வாழ்கிறார் அதிசயங்கள் செய்பவர் நமக்குள் வாழ்கிறார் என்றும் வாழ்கிறார்
துதித்துப் பாடிடுவோம் புகழ்ந்து நாம் போற்றிடுவோம்
கலங்காதே என் மகனே சோர்ந்திடாதே என் மகளே - கன்மலையை பிளந்து தண்ணீரைத் தந்தவர் உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
நீ விசுவாசித்தாலே தேவ மகிமையைக் கண்டிடலாம் - மாராவின் தண்ணீரைத் தேனாக மாற்றினவர் உன் வாழ்வை வளமாக்குவார்
நீ போகும் பாதையிலே வனாந்தரம் வந்தாலும் ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன் நீர் ஊற்றை உனக்கருள்வார்