அற்புதமாய் என்னை நடத்திய தேவா
arpudhamaay ennai nadathiya devaa
அற்புதமாய் என்னை நடத்திய தேவா ஆனந்தமாய் உம்மை ஸ்தோத்திரிப்பேன் அறியா பாதையில் அன்புடன் நடத்தி (2) அன்பின் கரத்தால் தாங்கினீரே
மேடுகள் பள்ளங்கள் கடந்திடவே சோதனை நேரத்தில் ஜெயம் பெறவே சேர்ந்து என்னுடன் தினமும் நடந்தீர் (2) சோர்ந்திடாமல் காத்துக் கொண்டீர்
வறட்சி வேளைகள் வந்திடினும் வாடிடா உள்ளம் எனக்களித்தீர் குறைகள் நீக்கி நிறைவாய் வைத்தீர் (2) கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
அக்கினி சோதனை வந்திடினும் ஆவியில் நிறைந்த வாழ்வளித்தீர் தனித்து உம்முடன் ஜெபித்து மகிழ்வேன் தரணியில் அதுவே பேரின்பமே