அற்புதம் செய்திடும்
arpudham seydhidum
அற்புதம் செய்திடும் பொற்கரனே அற்புத கிரியை செய்யும் அற்புத கிரியை நடப்பியும் உமது நாமத்தின் மகிமைக்காக ஆ! ஆ
பிறவிக் குருடனின் கண் திறந்து பார்வை அடையச் செய்து உம்மையே காண அனுக்கிரகம் செய்த அற்புத வல்லவரே - ஆ! ஆ
அந்தகாரத்தில் இருக்கும் ஜனம் ஒளியைக் கண்டடைய அற்புத கிரியை நடப்பித்து உமது மகிமையை வெளிப்படுத்தும் - ஆ! ஆ
சந்திர ரோகியை சொஸ்தமாக்கி விடுதலையை அளித்து சமாதானத்துடனே ஜீவியம் செய்ய அற்புதம் செய்தவரே - ஆ! ஆ
சாத்தானுக் கடிமையாயிருக்கும் ஜனம் விடுதலை அடைந்து உமது அடிமைகளாகிடவே நீர் அற்புத கிரியை செய்யும் - ஆ! ஆ!
லேகியோன் பிசாசுகளைத் துரத்தி விடுதலை அளித்து பிசாசின் கிரியை அழிந்திடச் செய்த அற்புத வல்லவரே ஆ! ஆ