அற்புதம் அற்புதம் அற்புதமே
arpudham arpudham arpudhamae
அற்புதம் அற்புதம் அற்புதமே ஆண்டவர் நாமத்தினால்
அற்புத நாதன் அன்பராம் இயேசு அற்புதம் செய்திடுவார் - ஆ! ஆ
பாடையைத் தொட்டு பாலகனை பலத்துடன் எழும்பச் செய்தார் தாயினைத் தேற்ற தற்பரனேசு அற்புதம் செய்தனரே - ஆ! ஆ
அற்புதம் செய்திடும் தற்பரன் பற்பல நோய்களையும் அற்புத சக்தி வெளிப்படச் செய்து ஆரோக்கியம் அளித்தார் - ஆ! ஆ !
கானாவூர் கல்யாண வீட்டிலே கர்த்தரும் சென்றனரே கலக்கங்கள் நீங்க கவலைகள் போக நவரசம் கொடுத்தனரே - ஆ! ஆ !
குஷ்ட ரோகத்தைக் குணமாக்கினார் கஷ்டங்களை நீக்கினார் வார்த்தையினாலே வாதைகள் தீர்த்து வல்லமை காண்பித்தாரே - ஆ! ஆ!
மரித்த லாசரு உயிர்த்தெழும்ப மரணத்தை அழிப்பவராய் மகிமையைக் காண்பாய் விசுவாசி யென்றார் மகிபரை நம்பிடுவோம் ஆ! ஆ
கல்லறை திறந்திட கற்பித்தாரே, அற்புதம் செய்திடவே லாசருவே நீ வந்திடு என்றார் லாசரு உயிர்த்தெழுந்தான் - ஆ! ஆ