அற்புத இயேசுவின் செய்கைகள்
arpudha yesuvin seygaigal
அற்புத இயேசுவின் செய்கைகள் யாவும் அற்புதமே என்றும் அற்புதமே தேவனின் அற்புதம் உந்தனில் மலர தேவனின் பாதம் சரணடைவாய்
எகிப்தின் பாரம் விலகிடுதே இருளும் நீங்கி ஒளி பெறுதே அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே
சிவந்த கடலும் வழி விடுமே தடையாம் எரிகோ அகன்றிடுதே கர்த்தரின் வார்த்தை வல்லமையாலே அற்புதம் உந்தனில் வெளிப்படுதே
சீறும் கடலை அமர்த்தினாரே சீடரின் பயத்தை அகற்றினாரே உந்தனின் பயத்தை யாவையும் நீக்கி அற்புத ஜெயமாய் நடத்திடுவார்