அற்புத ராஜன் இயேசுவை
arpudha raajan yesuvai
பல்லவி
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் -- 2 அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் -- 2
செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும் தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் --2 துன்பங்கள் மறைந்தே போகும் இன்ப வாழ்வு வந்து சேரும் -- 2 அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் -- 2
விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும் வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் --2 அன்பரின் பாதம் வாரும் அற்புதங்கள் இன்றே பாரும் -2
பல்லவி
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் -- 2 அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் -- 2