அற்புத தேவனின் செய்கைகள் யாவும்
arpudha devanin seygaigal yaavum
அற்புத தேவனின் செய்கைகள் யாவுமே அற்புதமே என்றும் அற்புதமே தேவனின் அற்புதம் உந்தனில் மலர தேவனின் பாதம் சரண்டைவாய்
1. எகிப்தின் பாரம் விலகிடுதே இருளும் நீங்கி ஒளி பெறுதே அகத்தினில் மறைந்திடும் பாவங்கள் நீக்கி இயேசுவின் ஒளியும் தோன்றிடுதே – அற்புத
2. சிவந்த கடலும் வழிவிடுமே தடையாம் எரிகோ அகன்றிடுமே கர்த்தரின் வார்த்தையின் வல்லமையாலே அற்புதம் உந்தனில் வெளிப்படுமே – அற்புத
3. வறண்ட தாகம் தீர்த்திடவே ஓங்கிய புயத்தை நீட்டினாரே கன்மலை திறந்து தாகமே தீர்த்திடுவார் எந்தனின் தாகத்தை தீர்த்திடுவார் – அற்புத
4. குருடர் செவிடர் முடவருக்கும் சுகமே இயேசு அளித்தனரே இயேசுவின் நாமம் ஒளஷதமாகும் அற்புத சுகமே அடைந்திடுவாய் – அற்புத
5. சீறும் கடலை அமர்த்தினாரே சீடரின் பயத்தை அகற்றினாரே உந்தனின் பயங்கள் யாவையும் நீக்கி அற்புதர் ஜெயமாய் நடத்திடுவார் – அற்புத
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A F#m Bm A
D E A
A D E F#m
A E F#m A
A F#m A
F#m D Bm A
A D Bm E
D E A F#m A
A F#m A
F#m D Bm A
A D Bm E
D E A F#m A
A F#m A
F#m D Bm A
A D Bm E
D E A F#m A