அர்ப்பண மலராய் வந்தேன்
arppana malaraay vandhen
அர்ப்பண மலராய் வந்தேன் அர்ச்சனையாக்கினேன் என்னை ( 2 ) மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் ( 2 ) வேள்வியில் சேர்த்துக் கொள்வாய் - அந்த ஜோதியில் நிறைவு கொள்வேன் ( 2 ) ஆ . .
கோதுமை மணியாய் மடிந்து என்னை வெண்ணிற அப்பமாய்த் தந்தேன் ( 2 ) என்னுடல் உன்னுடல் ஆகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே மகிழ்வுடன் தந்தேனே என்னைக் கனிவுடன் ஏற்பாயே - 2
விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி அதிபதி உன் திட்டம் மறந்தேன் ( 2 ) மதியில்லாதவன் ஆனாலும் விழியிழந்தே நான் போனாலும் சுதியுடன் சேர்த்துக் கொள்வாய் நான் கவியுடன் பாட்டிசைப்பேன்